72. அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்
இறைவன் அக்னீஸ்வரர்
இறைவி சௌந்தர நாயகி, வார்கொண்டமுலையம்மை
தீர்த்தம் காவிரி, குடமுருட்டி, சூரிய தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருக்காட்டுப்பள்ளி' என்று அழைக்கப்படுகிறது. திருவையாறிலிருந்து 18 கி.மீ. தூரம். திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்தை ஒட்டிய சிறிய தெருவில் சென்றால் இக்கோயிலை அடையலாம். தஞ்சாவூருக்கு மேற்கே உள்ள பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Tirukattupalli Gopuramஉறையூரை ஆண்டு வந்த மன்னன், நந்தவனத்தில் இறைவனுக்கு மலர்ந்த மலர்களை எடுத்து தனது மனைவிகளுக்குக் கொடுத்தான். மூத்த அரசி மட்டும் மலர்களை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார். இளைய அரசி மலரை தனது தலையில் சூடிக்கொண்டாள். அதனால் உறையூரில் மண்மாரி பெய்தது. இதிலிருந்து மூத்த அரசி மட்டும் தப்பித்து மேலைத்திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை வழிபட்டாள். அவளுக்கு இரங்கிய இறைவன் அருளிய தலம். அக்னி பகவான் வழிபட்டதால் இத்தலத்து மூலவர் 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்.

Tirukattupalli Utsavarமூலவர் 'அக்னீஸ்வரர்', 'தீயாடிப்பர்' என்னும் திருநாமங்களுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'சௌந்தர நாயகி', 'வார்கொண்ட முலையம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

Tirukattupalli Guruஇக்கோயிலில் குருபகவான் இரண்டு கரங்களுடன், மகர கண்டி, ருத்ராட்ஷம் அணிந்து யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவருக்கு நெய்தீபம் ஏற்றி, வில்வம், முல்லை சாற்றி வழிபட்டால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கியே காட்சி தருகின்றனர்.

திருமால், பிரம்மன், அக்கினி, சூரியன், கணங்கள் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com